மினாரா புனரமைப்பு
புத்தளம நகரில் அமைந்துள்ள அல் குர்ஆன் இறக்கப்பட்டு 1400 ஆண்டு ஞாபகார்த்த மினாரா புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபைத் தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்
இந்த மினாரா உடைந்து விழும் நிலையில் காணப்படுவதால் குறித்த மினாராவை உடைத்து விட்டு புதியதொரு மினரா அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. . மீள் கட்டுமாணப் பணிகளுக்காக பெரிய பள்ளியினால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதோடு புதிய மினாரா கட்டுமானப் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறும் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபைத் தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் கேட்டுள்ளார்.
( அபூ நாஹித் )