பாத்திமாவில் மாணவ தலைவிகள் தினம்
புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் 2011ம் ஆண்டுக்கான மாணவ தலைவிகள் தினம் 09ம் திகதி புதன் கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.. புதிய மாணவ தலைவிகளாக 29 பேர் பதவி பிரமாணம் செய்துகொண்டதோடு அவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் திருமதி சுமையா றிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி நஸீம் நிஸாம்தீன் பிரதம அதிதியாகவும் ஸெய்னப் ஆரம்ப முஸ்லிம் பெண்கள் பாடசாலை அதிபர் திருமதி பெலஜியா அபுல் ஹுதா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
வளர்ச்சியின் படிகளில்
தலைவர்கள் உருவாக்கம்
எமது மாணவிகள் எதிலும் சளைத்தவர்களல்ல என்பதற்கு பாத்திமா மாணவிகள் சிறந்த ஒரு உதாரணமாகும்.
பாத்திமாவின் உருவாக்கங்களை பாராட்டி வாழ்த்துவதுடன், அதன் ஆரம்பகாலத்தில் பல புரட்சிமிக்க மாற்றங்களை ஏட்படுத்துவதற்கு காரண கர்த்தக்களாக இருந்த நசீம் ஆசிரியை போன்றவர்களுக்கு அல்லாஹ் நற்கூளிகளை வழங்க வாண்டும் என்றும் பிராத்திக்கின்றோம்.
பாத்திமா பழைய மாணவிகள்