இல்ல விளையாட்டுப் போட்டி

கரைத்தீவு முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் அதிபர் பாரிஸ் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. தேசிய கொடியை முன்னால் அதிபர் ஜவாத் ஏற்றி வைத்து இறுதி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். மர்வா இல்லம் முதலாம் இடத்தைப் பெற்று கொண்டது. இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே ஹிரா, சபா இல்லங்கள் பெற்று கொண்டன.
மாணவர்களின் உடற் பயிற்சி கண்காட்சி பார்வையாளருக்கு விருந்தாக அமைந்திருந்தது.