இல்ல விளையாட்டுப் போட்டி
புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி சுமையா றிஸ்வானின் தலைமையில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. தேசிய கொடியை புத்தளம் வலயக் கல்வி பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபுல் ஹுதாவும் மாகாண கொடியை பாட இணைப்பாளர் இஸட்.ஏ. ஸன்ஹிரும் ஏற்றி வைத்தனர்.
ஜமாலியா இல்லம் 225 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. பவாசியா இல்லம் 220 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் கமாலியா இல்லம் 212 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. 205 புள்ளிகளைப் பெற்று சமாலியா இல்லம் நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
மாணவர்களின் உடற்பயிற்சி, அணிநடை, பெற்றோர்களின் ஓட்டப்போட்டி என்பவை பார்வையாளர்களை கவரக்கூடியதாக அமைந்திந்தது.