‘UUBAA’ புத்தளத்தில் இலகு விநியோக முறைமை (Delivery Service) அறிமுகம்
புத்தளம் நகரில் “UUBAA” எனும் இலகு விநியோக முறைமையொன்றை (Delivery Service) தனது முதல் முயற்சியாக அண்மையில் உத்தியோகபூர்வமாக…
(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)
வெளிநாட்டில், கொழும்பில் என அனைத்து இடங்களிலும் முறையான விநியோக முறைமை (Delivery Service) ஒன்று காணப்படுமிடத்து, அதன் அனுகூலங்களை நுகர்ந்த நிலையில், தனது ஊரிலும் ஏன் இந்த முறைமை அமையப்பெறக்கூடாது, இதன் அனுகூலங்களை எம்மவர்களும் ஏன் பெறக்கூடாது என தான் கண்ட கனவை புத்தளம் நகரில் வாலிபன் ஒருவன் நனவாக்கியுள்ளான்.
புத்தளம் நகரில் “UUBAA” எனும் இலகு விநியோக முறைமையொன்றை (Delivery Service) தனது முதல் முயற்சியாக அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பின்றி இருந்த இளைஞர்கள், போதிய வருமானம் இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வீட்டிலிருந்தே எங்களுக்கு தேவையான பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய வசதிகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எம்மவர்களின் விற்பனையை அதிகரிக்கும், பரவலாக்கும் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அநேகமான எம்மவர்கள் வெளிநாட்டிலும், வெளியூர்களில் பணி செய்துகொண்டிருக்கும் நிலையில் வீடுகளில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டிருக்கிறது. அந்த கவலைகளை இந்த ‘எப்ளிகேஷன்’ (Application) நிவர்த்தி செய்கின்றது. செய்யும்.
இவ்வாறான ஒரு ‘Application’ ஊருக்கு கிடைத்திருக்கையில், அதன் அனுகூலங்களை சுவைத்திட அனைவரும் தயாராகுவோம். ஏதேனும் குறைகள், ஆலோசனைகள் இருக்குமிடத்து அதனை தெரியப்படுத்தும் போது அவைகள் ஏற்றுக்கொள்ளப்படும். புத்தளத்தில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றத்தில் எம்மையும் இணைத்து கொள்வோம்.
கீழே உள்ளே லிங்க் இணை அழுத்துவதன் மூலம் உங்கள் தொலைபேசியில் இதனை நிறுவிக்கொள்ள முடியும். https://apps.apple.com/lk/app/uubaa/id1555493308 / https://play.google.com/store/apps/details?id=com.uubaa_customer
UUBAA Application – புத்தளம் நகரம் – விநியோக முறைமை – புதிய முயற்சி
WAK