YSF அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வில் புத்தளம் சொந்தங்கள் பங்கேற்பு
“Youth Scholarship Foundation”ன் வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (03-04-2023) “Stafford Srilankan School” ல் குடும்பங்கள் அடங்கலாக சுமார் 200க்கு மேற்பட்ட புத்தளத்து சொந்தங்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதமான காற்றுடன் கூடிய காலநிலையுடனும், புத்தளத்து வாடையுடனான கஞ்சியுடனும் நோன்பு திறந்ததுடன், மஹ்ரிப் அதானை நிறைவு செய்து செல்வன் சைதின் கிராஅத்துடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய அமைப்பின் நடப்பாண்டு தலைவர் சகோ. ஜெசார் “தற்போது 30 மாணவர்கள் அடங்கலாக இதுவரைக்கும் 125 மாணவர்கள் புலமைப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். இன்னும் தேவைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விஷேட உரையாற்றிய சகோ. அஜ்மல் “ நாம் இங்கு எமது தேவைகளை நிறைவேற்ற வந்துள்ள அதேநேரம் எமது உழைப்பில் மிகச்சிறிய பங்களிப்பை நல்கும் போது அங்கே எமது சமூகம் கல்வி அறிவுள்ள சமூகமாக மாறுகிறது. துறைசார்ந்தோரை உருவாக்குவதில் இன்னும் நாம் பின்னோக்கியே இருக்கிறோம். வெளிநாட்டில் உழைக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை கல்விக்காக, அதுவும் தொடர்ச்சியாக 12 வருடங்கள் புத்தளத்தின் மனித வள உருவாக்கத்திற்கு ஒரு இன்றியமையாத சேவையை செய்துவரும் அமைப்பு என்றால் இந்த அமைப்பையே நான் குறிப்பிடுவேன் என தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பினை சகோ. வசீம் அக்ரமும் நன்றியுரையினை சகோ. மஜாஸும் நிகழ்த்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.
WAK